மிகுந்த கவனத்துடன் அப்புறப்படுத்த வேண்டிய கொரோனா நோய் தடுப்பு கவச உடைகள் பாதுகாப்பற்ற முறையில் மதுரை விமான நிலைய வாயிலில் கிடந்தது பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று நோயால் கடந்த ஒரு ஆண்டாக உலகம் முழுவதும் லட்சக் கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இதுவரை 12,000 மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
அதனை தொடர்ந்து, புதிய வகை கொரோனா தொற்று பரவி அதிலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மதுரை விமான நிலையம் வழியாக வந்தவர்களில் இதுவரை 156 நபருக்கு கொரோனா தொற்றும், 5 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் தொற்றை தடுக்க அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. முதற்கட்டமாக முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இருந்தும், தனி மனித இடைவெளியையும், முக கவசம் அணிவதையும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வதையும் விடாமல் தொடர்ந்து பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்லும் மதுரை விமான நிலைய வாயிலில் இன்று கொரோனா தடுப்பு கவச உடை மற்றும் முக கவசம் பாதுகாப்பற்ற முறையில் கிடந்தன.
இன்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உட்பட, அமைச்சர்கள் சிலரும் வந்து சென்ற நிலையில் கிடந்த இந்த உடையை பயணிகள் அச்சத்துடனேயே கடந்து சென்றனர்.
வாயிலில் வைக்கப்பட்டிருந்த காவல்துறை பேரிகேர்டு தடுப்பில் சிக்கி காற்றில் பறந்து கொண்டிருந்த அந்த கவச உடை மற்றும் முக கவசத்தை வெகு நேரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also read... கொரோனவால் முன்பு பாதிக்கப்பட்டவர்களும் தடுப்பூசி போட வேண்டுமா? எத்தனை டோஸ் போடலாம்? விளக்கும் ஆய்வறிக்கை!
இந்த உடையை விட்டுச் சென்றது பயணிகளா? அல்லது பணியாளர்களா? என்பதை விமான நிலைய நிர்வாகம் விசாரிக்க வேண்டும். இனி இது போன்ற நிகழாமல் தடுக்க விமான நிலையத்திற்கு உள்ளேயே தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை வி மான நிலைய வாயி லில் ஆபத்தான கொரோனா கவச உடை; நடவடிக் கை எடுக்குமா நிர்வாகம்? மிகுந்த கவனத்துடன் அப்புறப்படு த்த வேண்டிய கொரோனா நோய் தடுப்பு கவச உடைகள் பாதுகாப்பற்ற முறையில் மதுரை விமான நிலைய வாயிலில் கிடந்தது பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.