போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: கணிசமான அளவு பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: கணிசமான அளவு பேருந்துகள் இயக்கம்

மாநகரப் பேருந்து

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் தன்னிச்சையாக முடிவெடுத்ததால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.

 • Share this:
  ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

  ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

  இந்தப் போராட்டத்தில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

  இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முடியும் வரை போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனையேற்று போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

  இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தொமுச நிர்வாகி நடராஜன், ‘போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் தன்னிச்சையாக முடிவெடுத்ததால், திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த உள்ளதாக’ தெரிவித்தார்.

  அதன்படி சென்னையில் அம்பத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கபடவில்லை. அம்பத்தூர் பணிமனையில் காலை 5.30 மணி நிலவரப்படி 120 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 18 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

  அதேநேரம் பல்லவன் இல்லம் பணிமனையில் அதிமுக, பாமக, தேமுதிக ஆதரவு தொழிற்சங்க ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு வந்திருந்ததால் மாநகர பேருந்து சேவை பெரியளவில் பாதிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் சிரமமின்றி பயணித்தனர்.

  Must Read : மேடையில் மு.க.ஸ்டாலின் குரலில் பேசிய டிடிவி தினகரன்
  Published by:Suresh V
  First published: