Home /News /tamil-nadu /

தமிழக அரசு சின்னத்தில் இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா?

தமிழக அரசு சின்னத்தில் இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா?

தமிழ்நாடு அரசு சின்னம்

தமிழ்நாடு அரசு சின்னம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு அரசு சின்னம் உருவாக்க திட்டமிடப்பட்டபோதிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை மையமாக வைத்தே அரசின் சின்னத்தை தான் உருவாக்கியதாக ஓவியர் கிருஷ்ணராவ் பலமுறை கூறியிருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழக அரசின் லச்சினை(சின்னம்) ஆக இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம்பெற்ற பின்பு, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஒன்றிணைந்து சென்னை மாகாணமாக இருந்தது. அப்போது, சென்னை மாகாணத்துக்கு என தனி சின்னம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.  சென்னை மாகாண முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

    மத்திய அரசின் ஒப்புதலை தொடர்ந்து கோயில் கோபுரம் போன்ற சின்னம் சென்னை மாகாண அரசின் சின்னமாக உருவாக்கப்பட்டது.  மதுரையைச் சேர்ந்த ஓவியரான ஆர். கிருஷ்ணராவ் என்பவர் இதனை உருவாக்கினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் கோபுரத்தை அடிப்படையாக கொண்டு இந்த கோபுர சின்னம் வரையப்பட்டதாக கூறப்படுகிறது.  திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் சத்யமேவ ஜெயதே என்ற வடமொழி சொல்லுக்கும் பதிவாக வாய்மையே வெல்லும் என்னும் தமிழ் வார்த்தை சேர்க்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்


    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு அரசு சின்னம் உருவாக்க திட்டமிடப்பட்டபோதிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை மையமாக வைத்தே அரசின் சின்னத்தை தான் உருவாக்கியதாக ஓவியர் கிருஷ்ணராவ் பலமுறை கூறியிருந்தார். எனினும், தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரமே என்று இன்றுவரை கூறப்பட்டு வருகிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம்


    இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் என்றே இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் அந்த சின்னத்தை வடிவமைத்த கலைஞர் கிருஷ்ணராவ் தான் மதுரை தெற்கு கோபுரத்தை அடிப்படையாக கொண்டே அந்த சின்னத்தை வடிவமைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார் “ என குறிப்பிட்டு கட்டுரையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.   மேலும், மதுரையின் மகுடத்தில் ஒளிகூட்டும் மற்றுமொரு கல் என்றும் இதனை அவர் பாராட்டியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madurai, Srivilliputhur Constituency, Su venkatesan, Temple

    அடுத்த செய்தி