ஸ்டெர்லைட் மூடல் என்பது அரசின் கொள்கை முடிவு - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

கோப்பு படம்

அரசின் கொள்கை முடிவில் யாரும் தலையிட முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு என்று தமிழக அரசு தெரிவித்தது. மேலும், அரசின் கொள்கை முடிவில் யாரும் தலையிட முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.



    Also read... கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க மத்தியரசு சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை? உயர் நீதிமன்றம் கேள்வி

    எனவே, ஸ்டெர்லைட் ஆலையின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published: