தமிழகத்தில் இதுவரை 70,116 ஏக்கர் பரப்பிலான சீமை கருவேலமரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றிட சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீர்வளத் துறையின் நீர்நிலைகளில் அகற்றப்பட வேண்டிய சீமைக்கருவேல மரங்களின் மொத்த பரப்பு ஒரு லட்சத்து 93,130 பெற்றோர் என கணக்கிடப்பட்டுள்ளது.
நீர்வளத் துறையின் நீர்நிலைகளில் இதுவரை 70,116 ஹெக்டேர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நீர்வளத் துறையின் நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றிட சீரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Assembly