மூன்று நாட்களில் 300 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு - 30,000 மருந்துகள் வேண்டி தமிழக அரசு கோரிக்கை!

கருப்பு பூஞ்சை பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபடியானோர் சமீப காலமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மூன்று நாட்களில் 300 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மருந்துகள் வேண்டி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபடியானோர் சமீப காலமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடமாநிலங்களில் மட்டுமே கண்டறியபட்டு வந்த கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) தொற்று தற்போது தமிழகத்திலும் கண்டறியபடுவதால் சிகிச்சைக்கான மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நோயை குணபடுத்த ஆம்போடெரிசின் - பி என்ற மருந்து பயன்பட்டுவரும் நிலையில் மத்திய அரசின் சார்பில் தற்போது வரை தமிழக அரசுக்கு 2,470 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு ஆளாவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஜூன் 2-ம் தேதி நிலவரப்படி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 518 ஆக இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Also read... 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும்?

தொடர்ந்து நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அம்போடெரிசின் பி மருந்துக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் கூடுதலாக 30,000 மருந்துகளை ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகரிக்கும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்திட கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை குணமடைந்த அனைவருக்கும் கொரோனோவுக்கு பின்னர் கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்திடவும் , மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை சார்பில் தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: