Home /News /tamil-nadu /

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க அரசு உத்தரவு

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க அரசு உத்தரவு

கோப்பு படம்

கோப்பு படம்

  • News18
  • Last Updated :
பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2020-21 ம் கல்வியாண்டில் 220 நாட்கள் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதில் உலர் உணவு பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்து மே மாதத்திற்கான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Also read... ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வீட்டுப்பாடங்களை குறைக்கலாம் - உயர் நீதிமன்றம் யோசனை

இதேபோல ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு தினசரி 100 கிராம் அரிசி 40 கிராம் பருப்பும், உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி, 56 கிராம் பருப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி