இபாஸ் தொடர்பாக முடிவெடுக்க 29-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

இபாஸ் தொடர்பாக முடிவெடுக்க 29-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
கோப்புப்படம் (PTI)
  • News18
  • Last Updated: August 27, 2020, 12:40 PM IST
  • Share this:
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள் பலரும், ஊரை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

சொந்த ஊர்களுக்கு திரும்புகிறவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த சேசுபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Also read... Gold Rate | தொடர் சரிவுக்கு இடையே திடீரென எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்


அந்த மனுவில், கொரோனா தொற்று நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உணவு மற்றும் உறைவிடத்திற்கான செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு இ–பாஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே இ– பாஸ் வழங்கப்படுவதால், சென்னையை விட்டு வெளியேற விரும்பும் மக்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்… அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இ பாஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் மனுதாரருக்கு அனுமதி அளித்தும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading