ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குழந்தைகளுக்கு மூன்றாவது போலியோ தடுப்பூசி இன்று முதல் அறிமுகம்

குழந்தைகளுக்கு மூன்றாவது போலியோ தடுப்பூசி இன்று முதல் அறிமுகம்

போலியோ தடுப்பூசி

போலியோ தடுப்பூசி

Polio Vaccine | ஒன்பது மாத குழந்தைக்கு மூன்றாவது டோஸ் போலியோ தடுப்பூசி இன்று முதல் அறிமுகமாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கொடுக்கப்படுவது வழக்கம். இதை தவிர குழந்தைகளுக்கு ஆறு வாரத்திலும் 14 வாரத்திலும் இரண்டு தவணைகள் IPV ( injectable polio vaccine) எனப்படும் போலியோ தடுப்பூசி செலுத்தப்படும். இவை அரசின் வழக்கமான தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போலியோ ஒழிப்பு நிபுணர் குழு, மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தியது. எனவே ஒன்பது மாத குழந்தைகளுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் இன்று முதல் ஒன்பது மாத குழந்தைகள் தடுப்பூசி செலுத்த செல்லும் போது அவர்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய தட்டம்மை, ருபெல்லா நோய்க்கு எதிரான MR தடுப்பூசி செலுத்தும்போது போலியோ மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.இது குழந்தையின் இடது கையில் வழங்கப்படும். MR தடுப்பூசி குழந்தையின் வலது கையில் வழங்கப்படும். எனவே ஆறு வாரங்கள் 14 வாரங்கள் ஒன்பது மாதம் என மூன்று தவணைகளில் இனி போலியோ தடுப்பூசி செலுத்தப்படும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் கர்ப்பிணி பெண்களும், 9.16 லட்சம் குழந்தைகளும் அரசின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள். இதில் கர்பிணிகளுக்கு 12 தடுப்பூசிகளும் குழந்தைகளுக்கு 11 தடுப்பூசிகளும் வழ்ங்கப்படுகின்றன. மாநிலத்தில் 99% தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

போலியோ நோய் இந்தியாவில் 11 ஆண்டுகளாகவும் தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளாகவுமில்லை. போலியோ இல்லா நிலை என்றாலும் நமது பாதுகாப்பை குறைத்துக் கொள்ள முடியாது என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.

First published:

Tags: Polio vaccine