Home /News /tamil-nadu /

”காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது" - கருணாநிதி புகைப்படத்தில் வாசகம் இடம்பெற காரணம் இதுதான்..

”காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது" - கருணாநிதி புகைப்படத்தில் வாசகம் இடம்பெற காரணம் இதுதான்..

”காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது" - வாசகத்துடன் கலைஞர் படம்

”காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது" - வாசகத்துடன் கலைஞர் படம்

நாட்டுக்காக பாடுபட்டத் தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் திறக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உருவப்படம் திறப்பதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் உள்ள தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, உறுப்பினராக இருந்தவர். 1957ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடங்கி 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தல் வரை 13 தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வென்றுள்ளார்.
1962ம் ஆண்டு சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், 1967ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சர், அண்ணா மறைவுக்குப் பின் 1969ம் ஆண்டு முதலமைச்சராகிறார் கருணாநிதி.

Also read: சட்டப்பேரவையில் 16வது தலைவராக கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத்தலைவர்

அடுத்து, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. திமுகவும் அதன் கழகக் கொள்கைகளும் இன்றைய தமிழகத்தின், ஏனைய இந்தியாவில் இருந்து முற்போக்குடன் சிந்திக்கும் தமிழகத்தின் முதுகெலும்பு என்றே சொல்லலாம்.

கலைஞரின் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட சலுகைகள், திட்டங்கள் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் கலைஞர் கருணாநிதி பல முக்கியமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் திறக்கப்பட்டுள்ளது. அவரது படத்திற்கு கீழ் ”காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது”, என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது என்ற கருத்தாளர் கருணாநிதி. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் அறைக்குச் செல்லும் மாடிக்கான படிகளில் ஏறும்போது, "காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது" என்ற பொன்மொழி இடம்பெற்றிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

”தமிழகம் வளம் பெற்று மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மெய் வருத்தம் பாராமல் கண் துஞ்சாமல் பசிநோக் காமல் சிலரால் அள்ளி வீசப்படும் அவதூறுக் கணைகளை அலட்சியப்படுத்தி; ஆக்கப்பூர்வமான பணிகளால், நமது தாய்த் தமிழகத்தின் புகழ் தரணியெங்கும் பரவி நிலைபெற வேண்டும் எனும் ஒரே நோக்கத்துடன்; காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது எனும் முதுமொழிக்கொப்ப, ஒவ்வொரு நொடியும் தமிழக மக்களுக்குப் பயன் தரவேண்டும் எனும் எண்ணத்தோடு உழைத்துவருவதாக”, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி பேசி இருந்தார்.

80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஓய்வின்றி உழைத்தவர் கருணாநிதி. அந்த வகையில் காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: DMK Karunanidhi, TN Assembly

அடுத்த செய்தி