• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாலியல் தொல்லை: வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் (வீடியோ)

பாலியல் தொல்லை: வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் (வீடியோ)

மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக தாக்கப்பட்ட ஆசிரியர்

மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக தாக்கப்பட்ட ஆசிரியர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    செங்கம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். 

    செங்கம் அருகே உள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கணித ஆசிரியர் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு வகுப்பு விடுமுறையில் நடைபெற்றுள்ளது. அப்போது கணிதம் பாடத்திற்கான சிறப்பு வகுப்பு முடிந்த உடன் குறிப்பிட்ட அந்த மாணவியை ஆசிரியர் கண்ணன் தனியாக அழைத்து வந்து தலைமையாசிரியர் அறையில் வைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

    அதனை கண்டு பயந்த மாணவி கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்த போது ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் தலைமை ஆசிரியரிடம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வகுப்பறையில் இருந்த குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கண்ணன் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த ஆசிரியரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: