தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்

மாதிரிப் படம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளுநரின் உரையில் கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • Share this:
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. 2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், கடந்த சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே, இந்த முறையும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் தொடங்கும். ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அதனை சபாநாயகர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து கூறுவார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளுநரின் உரையில் கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பும் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் நிறைவடையும். அதன்பின்னர், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எப்படி நடத்துவது என திட்டமிடுவர். ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு எத்தனை நாட்கள் அனுமதிப்பது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். இதனை சபாநாயகர் முறைப்படி அறிவிப்பார்.

மேலும் படிக்க... ஆந்திராவில் சடலத்தை இரண்டு கிலோ மீட்டர் தோளில் சுமந்துசென்ற பெண் எஸ்ஐ: குவியும் பாராட்டு

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: