கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்டு பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சிபிசிஐடியின் எஸ்.பி மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
இதற்கான ஆணை கடந்த வாரம் வெளியிடபட்ட நிலையில் விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கபட்டுள்ளார். அவருடன் டிஎஸ்பிகள் சந்திரசேகர், அண்ணாதுரை, வினோத் ஆகியோர் உள்ளனர். மேலும் மேற்கு மண்டல காவல்துறையில் புலனாய்வில் சிறப்பாக செயல்படும் 3 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்களும் இவர்களுக்கு உதவியாக இருக்க 36 போலீசாரும் நியமித்து கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கபட்டுள்ளது.
விசாரணை குழு குறித்த விபரங்களை டிசம்பர் 2-ந்தேதி உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவிக்க உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBCID, CBCID Police, Jayalalithaa, Kodanadu estate, TN Govt