ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான அரசாணையில் தெளிவில்லை - நீதிமன்றம்

news18
Updated: June 13, 2018, 4:38 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான அரசாணையில் தெளிவில்லை - நீதிமன்றம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை
news18
Updated: June 13, 2018, 4:38 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெளிவில்லை என அதிருப்தி தெரிவித்தது.  ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசியலமைப்புச் சட்டத்தின்படி கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிடலாமே என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உயிருக்கு 20 லட்சம் ரூபாய் ஈடாகுமா? என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.  இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...