காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல்: வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

news18
Updated: May 16, 2018, 1:55 PM IST
காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல்: வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!
உச்ச நீதிமன்றம்
news18
Updated: May 16, 2018, 1:55 PM IST
காவிரி வரைவு திட்டம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கர்நாடகா சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் பேசுகையில், வறட்சி காலத்தில் காவிரி நீர் பங்கீட்டினை வாரியம் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியது.

மேலும், அணைகளில் நீர் உள்ள காலங்களில் நீர் பங்கீடு குறித்து மாநிலங்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியது. தொடர்ந்து கர்நடக சார்பாக எழுந்த வாதத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த காவிரி வரைவு திட்ட அறிக்கையில் சில அம்சங்களை எதிர்ப்பதாகவும் கூறின. இதனை தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் முடிந்து அரசு அமையாததால் வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரியது.

அவர்களை தொடர்ந்து மத்திய அரசு சார்பாக நடைபெற்ற வாதத்தில், நடுவர் மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை ஏற்றுகொள்ள ஒப்புதல் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு காவிரியில் இறுதி முடிவை மத்திய அரசே எடுக்கும் என்ற அம்சத்தை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தற்போதைய சூழலில் காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்ட கூடாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், வாரியம் அமைத்த பிறகு வாரியம் அனுமதி கொடுத்தால் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறியது. மேலும் வாரியத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் என்றே பெயரிட வேண்டும் என்றும், வரைவு திட்ட அறிக்கையின் தலைமையகத்தை டெல்லியிலே அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

வழக்கை நாளை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், திருத்தப்பட்ட செயல் திட்டத்தை சமர்ப்பிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசு வழக்கறிஞர் சேகர் நாப்த்தே பேசுகையில் காவிரி வழக்கில் தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்