தமிழகத்தில் தீபாவளியன்று காலையிலும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மாதிரிப் படம்

காலையில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தென் மாநிலங்களில் மட்டும் காலையிலும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். சிவகாசியில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும், 1000-கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசு கட்டுபாட்டுக்கு காரணமாக உள்ள பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தனர். எனினும் தீபாவளியின்போது, நாடு முழுவதும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை பலரும் எதிர்த்தனர். அதனால் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரி  உச்ச நீதிமன்றத்த்தை நாடியது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தீபாவளியன்று தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் காலையிலும் பட்டாசு வெடிக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர். மேலும் காலையில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மற்ற மாநிலங்களை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படியே இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: