தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தின் ஒப்புதலுடன், தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து நீதிமன்ற இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேதாந்தா நிறுவனத்தின், ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவையும், 6 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை அமைத்து உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாக உள்ள ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்தது. இதனை ஏற்ற நீதிபதிகள் தமிழகத்திற்குத் தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. அத்துடன், தேவையான
ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
Must Read : மே 2-ம் தேதி தேர்தல் வெற்றி கொண்ட்டாட்டங்களுக்கு தடை - தேர்தல் ஆணையம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, வேதாந்தா நிறுவனம். ஆக்சிஜ உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும் அங்கே உற்பத்தி செய்யப்படும்
ஆக்சிஜனில் தமிழகத்துக்கு முன்னுரிமை தர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.