முகப்பு /செய்தி /தமிழ்நாடு / லேப்டாப்பை சார்ஜ் செய்தபடியே இயக்கிய மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

லேப்டாப்பை சார்ஜ் செய்தபடியே இயக்கிய மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

லேப்டாப்பை சார்ஜ் செய்தபடி இயக்கிய மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சிரயான்குழியைச் சேர்ந்த பென்னட், மகிழ் ஜெபகனியின் மகள் பெர்ஜின். இவர் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு வீட்டில் பெர்ஜினும் அவரது தாயார் மகிழ் ஜெபகனியும் மட்டுமே இருந்துள்ளனர். இரவு 10 மணிவரை லேப்டாப் பயன்படுத்தி பெர்ஜின் படித்துக் கொண்டிருந்ததால் மகிழ் ஜெபக்கனி மகளிடம் படித்து முடித்தவுடன் தூங்குமாறு கூறிவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

நேற்று காலை மகிழ் ஜெபக்கனி எழுந்து பார்க்கையில் பெர்ஜின் கருகிய நிலையில் லேப்டாப் மீது சாய்ந்து கிடந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த் மகிழ் ஜெபக்கனி கதறி அழுதுள்ளார்.

அவரது அழுகை சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அப்போது ஒருவர் மாணவியின் உடலை தூக்க முயன்ற போது அவருக்கு மின்சாரம் தாக்கியதில் சிறிது காயம் ஏற்பட்டது. அப்போது தான் மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் லேப்டாப்பிற்கு வரும் மின்சாரத்தை துண்டித்துவிட்டு மாணவியின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து மார்தாண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் மாணவி பெர்ஜியின் உடலை மீட்ட காவல் துறையினர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Girl dead, Kanyakumari, Laptop charging failure