உலகின் பல்வேறு நாடுகளில் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு மையத்தில் 3 இந்திய நிறுவனங்கள் தடுப்பூசி அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி விநியோக ஏற்பாட்டை உறுதி செய்ய கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
5 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் என முன் கள பணியாளர்கள் மற்றும், முதியவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
தமிழகம் முழுவதும் 2800 மையங்களில் தடுப்பூசியை இருப்பு வைத்து பயன்படுத்தவும், 51 மையங்களில் பதப்படுத்தி வைக்கவும் வசதிகள் உள்ளன. இந்த மையங்கள் அரசு மருத்துவமனை முதல் ஆரம்ப சுகாதார நிலையம் வரை இருக்கின்றன. இதில் 2 கோடி பேர்களுக்கான தடுப்பூசி இருப்பு வைக்க முடியும்.