ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மார்ச் 20-ம் தேதி வெளியீடு!

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மார்ச் 20-ம் தேதி வெளியீடு!

சென்னை மாநகராட்சி அலுவலகம்

சென்னை மாநகராட்சி அலுவலகம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மார்ச் 20-ம் தேதி வெளியிடப்படுகிறது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்குச்சாவடிகள் மையங்கள் அமைப்பது குறித்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் புதிய பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கான தேர்தலோடு 9 மாவட்ட தேர்தல்களையும் நடத்திட மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை மையமாக கொண்டு வாக்குச்சாவடிகள் அமைத்திட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவுப்படி புதிய வாக்குச்சாவடி மையங்களுக்கான வரைவு பட்டியலை சென்னை உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வெளியிட்டனர்.

வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக இன்று அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடம் சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆலோசனை நடத்தினார்.

இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலினை மார்ச் 6ம் தேதி வெளியிட மாநிக தேர்தல் ஆணையம் திட்டமிட்டுருக்கும் நிலையில் நாளைக்குள அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை வரும் 20-ம் தேதி வெளியிடவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Also see...

First published:

Tags: Local Body Election 2019