புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,ஆலந்தூர் , ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம்ஆகிய நான்கு தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: October 22, 2020, 4:43 PM IST
  • Share this:
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு முறையே கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை , மயிலாடுதுறை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது..அதில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன..குறிப்பாக, சோளிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.


அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில்,ஆலந்தூர் , ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம்ஆகிய நான்கு தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. ராணிப்பேட்டை தலைமை இடமாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி,ஆம்பூர், ஜோலார்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய சட்டமனற தொகுதிகள்இடம்பெற்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. கள்ளகுறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி( தனி ),
உளுந்தூர்பேட்டை, ரிசிவந்தியம், சங்கராபுரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில்செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர்(தனி), விழுப்புரம், திருக்கோவிலூர் , விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

Also read... சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? ஆய்வு கூறும் தகவல்..அதேப்போல் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளயங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற் தொகுதிகளும், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில்( தனி), வாசுதேவ நல்லூர் (தனி ), கடையனூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இதுவரையில் நியமனம் செய்யப்படாத நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading