• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா? ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்

மழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா? ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்

மழைநீர் தேங்காத இ.சி.ஆர். பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா?

மழைநீர் தேங்காத இ.சி.ஆர். பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா?

இயற்கையாகவே மழைநீர் தேங்காத பகுதியான கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது அவசியம் தானா என்று ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்த 4,034 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தின் கோவளம் வடிநிலப்பகுதியில் துரைப்பாக்கம் சோழிங்கநல்லூர் பெருங்குடி பள்ளிக்கரணை காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு தற்போது அக்கரை பாலவாக்கம் குடுமியாண்டித்தோப்பு, பனையூர், ராஜீவ் காந்தி நகர் பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இயற்கையாகவே இப்பகுதியில் பெய்யும் மழை நீரானது உடனடியாக மண்ணுக்குள் சென்றுவிடும். ஒரு மழை காலத்திலும் கூட இங்கு மழை நீர் தேங்கியது வெள்ளம் ஏற்பட்டது இல்லை. இப்பகுதியில் பெய்யும் மழை நீரை மழை நீர் வடிகால் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்வதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிடும்.

Also read... கொரோனாவுக்கு ரூ.7,372 கோடி செலவிடப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி தகவல்



மேலும் கடற்கரையோரம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் அப்பகுதி சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை இத்திட்டத்திற்காக பெறவேண்டிய கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியும் பெறாமல் திட்டம் துவங்கப்பட்டது தவறு என்பதால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சஜித் என்பவர் தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், தேசிய கடல் வளர் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை ஆகியோர் கொண்ட குழுவை நியமித்த தீர்ப்பாயம், இத்திட்டத்திற்கு உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா? திட்டத்தை செயல்படுத்த கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி அவசியமா? இயற்கையாகவே மழைநீர் தேங்காத பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது அவசியம் தானா? இப்பகுதியில் பெய்யும் மழை நீரை கால்வாய் மூலம் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுமா? இத்திட்டத்தால் கடலோர சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் என்ன? என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து டிசம்பர் 4ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு அன்றைய தினத்திற்கே வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: