மாசடைந்த முட்டுக்காடு நீர்நிலையை மறுசீரமைக்க குழு அமைத்த பசுமைத் தீர்ப்பாயம்

மாசடைந்த முட்டுக்காடு நீர்நிலையை மறுசீரமைக்க குழு அமைத்த பசுமைத் தீர்ப்பாயம்

மாசடைந்த முட்டுக்காடு

கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடைந்த முட்டுக்காடு நீர்நிலையை மறுசீரமைப்பு செய்ய குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு நீர்நிலையில் படூர், நாவலூர், திருப்போரூர், கோவளம் ஆகிய இடங்களில் உள்ள திடக்கழிவுகள் கொட்டப்பட்டதால் அந்நீர்நிலை மிகவும் மோசமடைந்தது. இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது தென்மண்டல தீர்ப்பாயம். முட்டுக்காடு நீர்நிலையை மறுசீரமைப்பு செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி, தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரி, மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஆகியோர் கொண்ட குழுவை நியமித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

Also read... கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா? வல்லுனர்கள் விளக்கம்முட்டுக்காடு நீர்நிலையின் மண் மற்றும் நீர் மாதிரிகள் சோதிக்க வேண்டும். நீர்நிலையை சீரமைக்க திட்டம் உருவாக்க வேண்டும். கழிவுகள் கொட்டியவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக இழப்பீடு பெற வேண்டும் என்று நிபுணர் குழுவிற்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

மேலும் குப்பை வண்டிகளில் ஜி.பி.எஸ் கருவி பொறுத்துவது, நீர்நிலையை சுற்றி சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதன் சாத்தியக் கூறுகள் பற்றியும் முட்டுக்காடு நீர்நிலையை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சூழல் பூங்காவாக மாற்றுவது குறித்தும் நிபுணர் குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்காக டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published: