• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மேட்டூர் சரபங்கா திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா? ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

மேட்டூர் சரபங்கா திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா? ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

மாதிரி படம்

மாதிரி படம்

மேட்டூர் சரபங்கா திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராய நிபுணர் குழுவை நியமித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மேட்டூர் அணையில் இருந்து 555 மில்லியன் கன அடி உபரி நீரை எடப்பாடி பகுதியில் உள்ள 33 குளங்களுக்கும் எம்.காளிபட்டி பகுதியில் உள்ள 67குளங்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 100 குளங்களுக்கு திருப்பி விடுவதற்காக மேட்டூர் சரபங்கா ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் உருவாக்கப்பட்டு இதற்கான அரசாணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது.

தற்போது இத்திட்டத்திற்காக சில பணிகளும் தொடங்கியுள்ள நிலையில், திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்துள்ள மனுவில், மேட்டூர் சரபங்கா நீர்ப்பாசனத் திட்டம் சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம். ஆனால் இத்திட்டம் உரிய அனுமதியைப் பெறும் முன்னரே தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக மேட்டூர் அணையில் உபரி நீர் இல்லை. சரபங்கா திட்டத்தில் மேட்டூர் அணையில் உபரி நீர் உள்ளது என்று தவறாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடைமடையில் இருக்கும் விவசாயிகளின் கருத்தைப் பெறாமல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை எடுப்பது நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நீர்ப் பற்றிக்குறையை உண்டாக்கும். இதனால் காவேரி டெல்டா விவசாயிகளிடையே பிரச்னை உண்டாகும்.

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும், அறிவியல் பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளாமல் திட்டத்தை தொடரக் கூடாது என்றும் இத்திட்டப் பணிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு பெற வேண்டும்.

உரிய அனுமதியின்றி திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு, தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Also read... தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: 3 லட்சம் பேர் பயனடைவர்



இந்த மனுவை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு மேட்டூர் சரபங்கா திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம் தானா? இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், பொதுப்பணித்துறை, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சென்னை மண்டல அதிகாரி ஆகியோர் கொண்ட குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிகுமாறு உத்தரவிட்டு வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்காக டிசம்பர் 10ஆம் தேதிக்கு உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: