Home /News /tamil-nadu /

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  • News18
  • Last Updated :
    தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவான 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.

    இதனால் மழைக்கான சாத்திய கூறுகள் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் அதிகபட்சமாக 2 செ.மீ மழையும் , உதகையில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Indian Meteorological Center, Rain

    அடுத்த செய்தி