• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று மாலையுடன் நிறைவடைகிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று மாலையுடன் நிறைவடைகிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம்

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன் வெளியூரைச் சேர்ந்தவர்கள், அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு.

  • Share this:
    9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன் வெளியூரைச் சேர்ந்தவர்கள், அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் திருநெல்வேலியில் களக்காடு, நான்குநேரி உள்ளிட்ட நான்கு ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், திருப்பத்தூரில் இரண்டு ஒன்றியங்களிலும், விழுப்புரத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களிலும் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இதேபோல் செங்கல்பட்டு, வேலூரில் தலா மூன்று ஊராட்சி ஒன்றியங்களிலும், தென்காசியில் கடையநல்லூர், குருவிகுளம் உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ள்ளக்குறிச்சியில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ராணிப்பேட்டையில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். இந்த பகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. பரப்புரை முடிந்த கையோடு வெளியூரைச் சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டி, நேற்றிரவே முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை மையமான சங்கரா கலைக் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.‘

    அனைத்துக் கட்சி பிரமுகர்கள், தேர்தல் அலுவலர் உள்ளிட்டோர் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு இரண்டு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மைய வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

    Must Read : கார் மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்... ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது உ.பி அரசு

    தீயணைப்பு துறை சார்பில் வாகனம் நிறுத்தப்பட்டு மின் தடை இல்லாமல் இருக்க ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கான வாக்குப்பெட்டி, அண்ணா பொறியியல் கல்லூரியிலும், உத்தரமேரூர் பகுதிக்கான வாக்குப்பெட்டிகள் திருப்புலிவனம் பகுதியில் இயங்கும் அரசு கலைக்கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல ஆங்காங்கே உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: