கோவை மாவட்டத்தில் 53 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 36 மாநகராட்சி பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் 19,000 தடுப்பூசிகள் கைவசம் இருக்கும் நிலையில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இன்று கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை மட்டும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்றது.
இந்நிலயில், கரூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 6,700 தடுப்பூசிகளில், இன்று 26 முகாம்களில் 6,200 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி முகாமில் காலை 6 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த மையத்தில் குறைவான தடுப்பூசி போடப்படும் நிலையில் டோக்கன் பெற்றவர்கள், பெறாதவர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக, தடுப்பூசி போடும் பணி முடங்கியிருந்த நிலையில், வியாழன்கிழமை சுமார் 1 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டத்திற்கு 2 ஆயிரம் கோவேக்சின் டோஸ்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அங்குள்ள சுகாதார மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. குறிப்பாக, ஏற்கனவே கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு, இரண்டாவது தவணை செலுத்தப்பட்டது. முதலில் குறைவான நபர்களே வந்ததால் தடுப்பூசி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. பயனாளர்களுக்கு உரிய முறையில் தகவல் அனுப்பப்பட்டு கொரோனா தடுப்பூசி போட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரு சிலர், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுவது குறித்து முறையான தகவல்கள் இல்லை எனக்கூறினர். மேலும், ஆன்லைனில் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
கோவையில் 5 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருப்பூரில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பின்னலாடை நிறுவன ஊழியர்களுக்கு போட்டது தொடர்பாக, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், மருந்தாளுநர் பாலமுருகன் 800 தடுப்பூசிகளை பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கியது தெரியவந்தது. ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய தனியார் மருத்துவமனையும், கோவின் செயலியிலிருந்து நீக்கப்பட்டது.
Must Read : டாஸ்மாக் திறப்பு அவசியமா?... இதுதான் விடியலா? - முதலமைச்சரை சாடும் வானதி சீனிவாசன்
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசிடமிருந்து ஜூன் மாதத்திலிருந்து 42 லட்சம் தடுப்பூசிகள் வர இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே புனேவிலிருந்து தமிழ்நாட்டிற்கு 3 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் விமானம் மூலம் வந்தடைந்தன, இவையனைத்தும் குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, CoronaVirus, Covid-19 vaccine, Vaccination