THE SCREENSHOT WAS SHARED ON SOCIAL MEDIA THAT SHE HAD APPLIED TO THE TN AND KERALA STATE COUNCIL FAKE LOCATION VIN SAR
’மருத்துவ சேர்க்கையில் முறைகேடு எதுவும் செய்யவில்லை.. மன உளைச்சலில் உள்ளோம்’ - நாமக்கல் மாணவியின் தந்தை விளக்கம்..
என் மகள் நல்ல மதிப்பெண் எடுத்த காரணத்தினால் அகில இந்திய கோட்டாவில் புதுவை ஜிப்மர் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே மாநில கலந்தாய்வு எதிலும் பங்கேற்கபோவதில்லை. நல்ல மதிப்பெண் கிடைத்து, நல்ல இடம் கிடைத்தும் இந்த செய்தியால் நாங்கள் மன உளைச்சலிலும் உள்ளோம் என்றார்.
என் மகள் நல்ல மதிப்பெண் எடுத்த காரணத்தினால் அகில இந்திய கோட்டாவில் புதுவை ஜிப்மர் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே மாநில கலந்தாய்வு எதிலும் பங்கேற்கபோவதில்லை. நல்ல மதிப்பெண் கிடைத்து, நல்ல இடம் கிடைத்தும் இந்த செய்தியால் நாங்கள் மன உளைச்சலிலும் உள்ளோம் என்றார்.
போலி இருப்பிட சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இரண்டு தரவரிசைப்பட்டியலிலும் இடம் பெற்றதாக சமூக வலைதளங்களிலும் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு வந்தது.
நாமக்கலை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 52-வது இடத்தையும் தமிழ்நாட்டில் 2-வது இடத்தையும் பிடித்தார். அவரது பெயர் கேரள தரவரிசைப்பட்டியலிலும் இடம்பெற்றிருப்பதாக ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இது குறித்து மாணவியின் தந்தை ரவிச்சந்திரன் நியூஸ்18.காம் அளித்த பேட்டியில், "நாங்கள் முறை கேடு எதுவும் செய்யவில்லை. நாமக்கல்லில் 130 ஆண்டுகளாக உள்ளோம். கேரளாவில் வெளி மாநிலத்தவர் - non keralite பிரிவில் விண்ணப்பித்தோம். நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பித்திருந்தோம். தமிழ்நாடு நாமக்கல் வசிப்பிட முகவரியை தான் கேரள கலந்தாய்வில் வழங்கினோம். அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளன.
தற்போது என் மகள் நல்ல மதிப்பெண் எடுத்த காரணத்தினால் அகில இந்திய கோட்டாவில் புதுவை ஜிப்மர் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே மாநில கலந்தாய்வு எதிலும் பங்கேற்கபோவதில்லை. நல்ல மதிப்பெண் கிடைத்து, நல்ல இடம் கிடைத்தும் இந்த செய்தியால் நாங்கள் மன உளைச்சலிலும் உள்ளோம்" என்றார்.
வெளி மாநிலத்தவர் கலந்தாய்வில் பங்கேற்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது " ஒரு மாணவர் இரண்டு மாநிலங்கள் விண்ணப்பதில் தவறில்லை. இரண்டு மாநிலங்களிலும் அந்தந்த மாநில இருப்பிடச் சான்றிதழ் வழங்கினால் தான் தவறு. ஒரு மாநிலத்தில் இருப்பிடச் சான்றிதழ் வழங்கி மற்றொரு மாநிலத்தில் வெளி மாநிலத்தவர் பிரிவில் விண்ணப்பிக்கலாம்" என்றார்.