கடலூரில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகளை மூடிய சிறுவர்கள்!

ஆழ்துளை கிணறுகளை மூடிய சிறுவர்கள்

பல கிராமங்களில் பழுதடைந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் உள்ளதாகவும் அவற்றை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கடலூர் அருகே திறந்த நிலையில் இருந்த பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை, பள்ளி சிறுவர்கள் தாங்களாகவே முன்வந்து மூடியுள்ளனர்.

  திட்டக்குடி அடுத்த சிறுமுளை, பெருமுளை, நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 30க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் 10க்கும் மேற்பட்டவை பழுதடைந்த நிலையில் மூடப்படாமல் இருந்தன.

  Also read... சுர்ஜித் செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோர்... பாத்ரூமில் தண்ணீர் கேனுக்குள் கவிழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

  இவற்றை அந்த பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் தாங்களாகவே முன்வந்து ஓடுகள், சாக்குப்பைகளை கொண்டு மூடினர்.

  இந்நிலையில், இதே போன்று பல கிராமங்களில் பழுதடைந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் உள்ளதாகவும் அவற்றை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: