• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மழை காரணமாக 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

மழை காரணமாக 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இன்று கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் திருவாரூர், ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் இன்னும் சீரமைக்கப்படவில்லை.

மேலும் இன்றும் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  இந்த தேர்வுகள் வரும் 28-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வு, அடுத்த மாதம் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: