டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு அரசின் நல்லாசிரியர் விருது கிடையாது

தகுதியற்ற ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைத்தால் மாவட்ட அளவில்  மாவட்ட தேர்வு குழுவினர் பொறுப்பை ஏற்க நேரிடும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு அரசின் நல்லாசிரியர் விருது கிடையாது
கோப்பு படம்
  • Share this:
அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்டவர்கள், தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். அன்றைய தினத்தில் மாநில அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


Also read... 30 சதவிகித பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

அதில் நல்லாசிரியர் விருதுக்கு விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி டியூசன் எடுப்பது, குற்றப்பின்னணி கொண்டிருப்பது, அரசியல் கட்சிகளோடு தொடர்பில் இருக்கும் ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைக்க கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு தகுதியற்ற ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைத்தால் மாவட்ட அளவில்  மாவட்ட தேர்வு குழுவினர் பொறுப்பை ஏற்க நேரிடும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நல்லாசிரியர் விருதுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading