முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை...!

முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடை கிடையாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: August 31, 2020, 6:45 PM IST
  • Share this:
மருத்துவ மேற்படிப்பில் தமிழகத்தில் சுமார் 2ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் 50% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மாநிலத்துக்கு உள்ள 50 % இடங்களில்  பாதி அரசு மருத்துவர்களுக்கும் பாதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வருபவர்களுக்கும் என ஒதுக்கப்பட்டிருந்தது.

2016ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து மதிப்பெண் முறையை கொண்டு வந்தது. மலைப் பகுதிகள், அணுக முடியாத இடங்கள், கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது.

ஆனால் அரசு மருத்துவர்களுக்கு இது பாதகமாக இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Also read... ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுஅதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் தற்போது, அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் அகிலன்
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் அகிலன் கூறுகையில், “ மதிப்பெண்கள் நிரந்தரம் அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில் மலைப் பகுதி, கிராமப்புறம், அணுக முடியாத இடங்களில் பணிபுரிவர்களுக்கான மதிப்பெண் மாறிக் கொண்டே இருந்துள்ளன.

தமிழ்நாடு பிற மாநிலங்களை விட வளர்ந்த மாநிலமாக இருப்பதால், இந்திய மருத்துவ கவுன்சில் வரையறை படி, அணுகமுடியாத பகுதிகள், கிராமப்புறங்கள் மிக குறைவு. எனவே முதுநிலை படிப்பில் சேரும் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்துள்ளது. முதுநிலை படிப்பில் ஒதுக்கீடு வழங்குவது அரசு பணியில் இளம் மருத்துவர்களை சேர ஊக்குவிக்கும்.” என்று கூறினார்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading