நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த பெருமாள் கோவில் மேடு பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது. கடந்த 4ம் தேதி புதன்கிழமை நள்ளிரவு அந்த பகுதியில் மழை பெய்துள்ளது. அப்போது ஏடிஎம் மையத்தில் மூகமுடி அணிந்து நான்கு பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்தது.
சிறிது நேரத்தில் மையத்தில் இருந்த சிசிடிவி இணைப்புகளை கண்டுப்பிடித்து இணைப்பை துண்டித்துள்ளது கொள்ளை கும்பல்.மேலும் கையுடன் எடுத்துவந்த வெல்டிங் மிஷினால் இயந்திரத்தை சாவகாசமாக உடைத்த கும்பல் 4.90,000 ரூபாயை கொள்ளையடித்தனர்.
ஏடிஎம் மையத்தைச் சுற்றி மிளகாய் பொடியை தூவிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. மறுநாள் ஏடிஎம் மையத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை கைபற்றி விசாரணை நடத்தி வந்தனர். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். தீவிர விசாரணையில் குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைத்த நிலையில், ஏ.கே. சமுத்திரம் ஞானோதயா பள்ளி அருகே தனிப்படை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்ட போது, உடைக்கப்பட்ட ஏடிஎம் எந்திரத்தின் சிறு சிறு பாகங்கள் கிடப்பதை கண்டுபிடித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏடிஎம்மில் கைவரிசைக் காட்டியதை ஒப்புக் கொண்டனர். பிடிபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான புரஜாபாத், 28 வயதான முகம்மது இம்ரான் என்பது தெரியவந்தது.
10 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் குடியேறியவர்கள் அஸ்தம்பட்டியில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அதனை ஈடுகட்ட கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
Also read... சென்னையில் தந்தையை கொன்று துண்டு, துண்டாக வெட்டிய மகன் - விலைக்கு இடம் வாங்கி சடலத்தை புதைத்த கொடூரம்
பிடிபட்டவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 58,000 ரூபாய் பணம், வெல்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர், கடப்பாரை, கோடாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், ஏ.டி.எம்., இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் பழுதுநீக்கும் முறைகள் குறித்து யூ டியூப்பில் வீடியோ பார்த்து அதன் மூலம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏ.டி.எம்., மையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுகின்றதா என கண்காணிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.