சென்னை தலைமை செயலகத்தில், நியாயவிலைக்கடை பணியாளர்களின் ஊதிய மறு சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
நியாயவிலைக்கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சக்தி சரவணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு நியாயவிலைக்கடை பணியாளர்கள், கூட்டுறவு பணியாளர் சங்கங்களிடம் கருத்துக்கள் கேட்டு, பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் அதன் தலைவர் சக்தி சரவணன் வழங்கினார்.
அதை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை எவ்வித தங்கு தடையின்றி பொது மக்களுக்கு வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா ஐ.ஏ.எஸ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.