ஆர்.எஸ்.எஸ், பாஜக இணைந்து ரஜினியை இயக்குகிறது - வேல்முருகன்

ஆர்.எஸ்.எஸ், பாஜக இணைந்து ரஜினியை இயக்குகிறது - வேல்முருகன்
ரஜினி
  • Share this:
நடிகர் ரஜினிகாந்தின் உண்மை முகம் இப்போது வெளிவருகின்றது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இணைந்து ரஜினிகாந்தை இயக்குகிறது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், கடிதம் எழுதி மக்களை ஏமாற்றாமல் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 மற்றும் 8- ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டனத்திற்குரியது, உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மரபுவழி குடமுழுக்கை நடத்தவில்லையென்றால் இந்து அறநிலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.


மேலும் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய கருத்திற்கு பதில் அளித்த அவர் நடிகர் ரஜினிகாந்தின் உண்மை முகம் இப்போது வெளிவருகின்றது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இணைந்து ரஜினிகாந்தை இயக்குவதாக கூறியுள்ளார்.

ராஜிவ் காந்தி விடுதலை விவகாரம் குறித்து பேசிய அவர், சட்டத்தை மதித்து நடவடிக்கை எடுக்க மறுத்து, தான் தோன்றிதனமாக முடிவெடித்து, ஏழு பேர் விடுதலை மறுப்பது ஜனநாயக படுகொலை. ஆளுநர் முடிவு எடுக்காவிட்டால், தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading