• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கண்டெய்னரில் பணம் இருப்பதாக வதந்தி: லாரியை திறந்து காட்டக்கோரி மக்கள் போராட்டம்!

கண்டெய்னரில் பணம் இருப்பதாக வதந்தி: லாரியை திறந்து காட்டக்கோரி மக்கள் போராட்டம்!

கண்டெய்னர் லாரியை முற்றுகையிட்ட மக்கள்

கண்டெய்னர் லாரியை முற்றுகையிட்ட மக்கள்

பொது மக்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார் கன்டெய்னர் ஆட்சியர் அலுலகம் கொண்டு வந்து திறந்தனர். அப்போது, லாரி முழுவதும் டீத்தூள் பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால் கண்டெய்னரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் நேற்றிரவு அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை பார்த்த அப்பகுதி மக்கள், அதனை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது லாரி ஓட்டுநர் பிரகாஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசிய நிலையில், கன்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக தகவல் பரவியது.

இந்தத் தகவலால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஆத்துப்பாலம் அருகே குவிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டனர்.

லாரியில் டீத்தூள் இருப்பதாக லாரி ஓட்டுனர் பிரகாஷ் அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால், இதனை நம்ப மறுத்த பொதுமக்கள், லாரியை தங்கள் முன்னிலையில் திறக்க வேண்டும் என்றும், இல்லையென்றால், லாரியை எடுத்துச்செல்ல அனுமதிக்கமாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக வலியுறுத்திய போலீசார், ஒருகட்டத்தில் லேசான தடியடி நடத்தியதால் லாரியைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் ஆளுக்கு ஒருபக்கமாக ஓடினர். 

இதையடுத்து அங்கு வந்த கோவை மாநகர துணை ஆணையர் பாலாஜி சரவணன், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் லாரியில் உள்ள பொருள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் கலைந்து செல்லவேண்டும் என மைக் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து கண்டெய்னரின் பூட்டு உடைக்கப்பட்டது. முழுமையாக திறக்க முடியாததால், லாரியை ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்ல முடிவு செய்த போலீசார், பொதுமக்களில் சிலரை மட்டும் அழைத்துக் கொண்டு லாரியுடன் ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து திறக்கப்பட்ட லாரியில் பண்டல் பண்டல்களாக டீத்தூள் இருப்பது தெரியவந்தது. இதனை பொதுமக்களும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளும் பார்வையிட்டனர்.

ஆனால், முன்பகுதியில் உள்ள மூட்டைகளை மட்டுமே சோதனையிட்டதாகவும், லாரியில் உள்ள அனைத்து மூட்டைகளையும் இறக்கி ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் திமுகவினர் கோரிக்கை வைத்தனர்.

வெள்ளகிணறு பகுதியில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டீத்தூள் இது என தெரிவித்த லாரியில் வந்த தனியார் நிறுவன ஊழியர் அக்பர், இந்த சோதனையால் ஜெர்மனிக்கு டீத்தூளை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கரூரில் பிடிபட்ட கண்டென்யர் லாரி போல பணத்துடன் பிடிபட்டதாக வெளியான தகவலால் உக்கடம் பகுதியே பரபரப்புக்குள்ளானது.

Also see...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: