ஈசிஆரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மக்கள்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை உதவி ஆணையர் விஸ்வேஸ்வரைய்யாவிடம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த கடையை திறக்ககூடாது. மீறி திறந்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  சென்னை கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கணியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதிமக்கள் மற்றும் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பொதுமக்கள் போராடும் தகவல் அறிந்த சோழிங்கநல்லூர் திமுக எம்எல்எ எஸ்.அரவிந்த் ரமேஷ் மற்றும் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா இருவரும் பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  Also read... தலைவி' படத்திற்கு தடை கேட்க தீபாவிற்கு எந்த உரிமையும் இல்லை - இயக்குனர் ஏ.எல்.விஜய்

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை உதவி ஆணையர் விஸ்வேஸ்வரைய்யாவிடம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த கடையை திறக்ககூடாது. மீறி திறந்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தார்.

  இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது முறையாக நீதிமன்றத்தில் அனுமதிபெற்று இந்த டாஸ்மாக் கடையை திறந்துள்ளனர். இது மற்ற டாஸ்மாக் கடை போன்று மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடிக்கும் கடை இல்லை வாங்கி கொண்டு செல்லும் இலைட் அரசு மதுபானம் கடையாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: