சட்டப்பேரவை கூட்டத்தொடரை 10 நாட்கள் முன்னதாகவே முடிக்க முடிவு!

பணப்பட்டுவாடா காரணமாக மக்களவைத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட வேலூரில் ஆகஸ்ட் 5-ல் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடப்பு கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை 10 நாட்கள் முன்னதாகவே முடிக்க முடிவு!
தலைமைச் செயலகம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 4:51 PM IST
  • Share this:
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரை வரும் 20-ம் தேதியே முடிக்க சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

துறை ரீதியிலான மானியக்கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜுலை 30-ம் தேதி வரை பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பணப்பட்டுவாடா காரணமாக மக்களவைத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட வேலூரில் ஆகஸ்ட் 5-ல் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடப்பு கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டது.


இதற்கான அலுவல் ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டத் தொடரை 20-ம் தேதியுடன் முடிப்பது என்றும், காலை மாலை என இரு பகுதிகளாக விவாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also see...

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...