Home /News /tamil-nadu /

பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களை குப்பைகளை அள்ளவைத்த தனியார் பள்ளி நிர்வாகம்..

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நேரடியாக சென்று கேட்டபோது, உடனடியாக தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி கண்டிப்பதாகவும் உறுதியளித்தார்.

திண்டுக்கல்லில் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களை குப்பைகளை அள்ளவைத்த தனியார் பள்ளி நிர்வாகம் அது பற்றிய விவரம் வருமாறு..

தமிழக அரசு ஜூன் 13ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், திங்களன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் குழந்தைகள் காலை 8 மணிக்கே உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

அதேபோல திண்டுக்கல் மேட்டுபட்டியில் உள்ள  பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் மாணவ - மாணவியர்கள் வருகை தந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு வந்த குழந்தைகளை பள்ளியை சுத்தம் செய்ய பயன்படுத்திக்கொண்டது.

மேலும் சேகரிக்கப்பட்ட குப்பைகளை பள்ளிக்கு வெளியே உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவதற்கு அனுப்பியது. இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் அந்த குப்பை தொட்டிகளை சுமந்து வந்து கொட்டினர். ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்வது முதல் அனைத்து வேலைகளும் வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

Also Read : ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்படுகிறார் - திருமாவளவன் காட்டம்

இந்நிலையில், மாணவர்களை பள்ளிக்கு கல்வி கற்க அனுப்பினால்  தற்பொழுது பிலோமினாள் பள்ளியில் மாணவர்களை குப்பை சுமக்க வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நேரடியாக சென்று கேட்டபோது, உடனடியாக தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி கண்டிப்பதாகவும் உறுதியளித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Tn schools

அடுத்த செய்தி