கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவில் சிலைகள் காணாமல் போவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுகிறார்களா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை காணமால் போனதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிலை மாறியிருப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது அர்ச்சகரின் கடமை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர்கள் தெய்வீக பணிகளை சரியாக ஆற்ற வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை மாயம் என்று மனு அளிக்கப்பட்டது. வாயில் பூவுடன் கூடிய மயில் சிலைக்கு பதில், பாம்புடன் உள்ள சிலை வைக்கப்பட்டது. சிலை மாறியது தொடர்பாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அறநிலையத்துறை அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்றாமல் இயந்திரத்தனமாக பணியாற்றுகின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: High court, Idol Theft, Mylapore Temple, Priests are not devotionally