வெளிமாநிலங்களிலிருந்து வரத்து குறைந்ததால் அதிரடியாக உயர்ந்தது தக்காளி விலை
வெளிமாநிலங்களிலிருந்து வரத்து குறைந்ததால் அதிரடியாக உயர்ந்தது தக்காளி விலை
தக்காளி
தமிழகத்திலும் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கும் புறநகர் பகுதிகளில் 90 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
நாள்தோறும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது, தமிழகத்திற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 1200 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக புனே, சட்டீஸ்கர் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும், தமிழகத்திலும் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கும் புறநகர் பகுதிகளில் 90 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலையேற்றத்திற்கு தக்காளி கொள்முதல் ஒருநாளைக்கு 650 டன் வரை குறைந்ததுதான் காரணம் என தெரிவிக்கும் வியாபாரிகள், அதிலும் 400 டன் வரைதான் முதல் தர தக்காளி கிடைப்பதாகவும், சில நாட்கள் மொத்தமாக அழுகி விடுவதால் வாங்குவதற்கு ஆரவமில்லை என கூறுகின்றனர்.
மேலும், லாரிகளின் வாடகை அதிகம் உள்ளதால் ரயில்கள் மூலம் தக்காளியை கொள்முதல் செய்துவர தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.