• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெங்காயத்தின் விலை ஒரே நாளில் ₹10 வரை உயர்ந்து கிலோ ₹90-க்கு விற்பனை

வெங்காயத்தின் விலை ஒரே நாளில் ₹10 வரை உயர்ந்து கிலோ ₹90-க்கு விற்பனை

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

    ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதன் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு கிலோ 65 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்ற சாம்பார் வெங்காயம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 65 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போன்று கிலோ 46 ரூபாய் முதல் 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 5 ரூபாய் வரை உயர்ந்து கிலோ 50 முதல் 66 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை உயர்வுக்கு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் வெங்காயம் அழுகிய நிலையில் இருப்பதே காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: