• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டெர்லைட்டை திறக்க இரண்டாவது முறையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு!

ஸ்டெர்லைட்டை திறக்க இரண்டாவது முறையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஆலையை திறக்க அனுமதி வழங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடுமாறு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான அனுமதியைப் புதுப்பிக்க இரண்டாம் முறையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.

    ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் டிசம்பர் 15-ம் தேதி ரத்து செய்தது. இருபதுக்கும் மேற்பட்ட நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட் ஆலையைத் செயல்படவும் அனுமதித்தது.

    அதனைத் தொடர்ந்து டிசம்பர் 19-ல் வேதாந்தா நிறுவனம் ஆலையை திறக்க அனுமதி கோரிய நிலையில் அதை ஜனவரி ஒன்றாம் தேதி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.

    தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு மத்திய அரசு தடை விதிக்க மறுத்ததால் ஜனவரி 10-ல் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மீண்டும் விண்ணப்பம் அனுப்பியது.

    அதேநேரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடுமாறு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

    அதன் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில், ஆலையை திறக்க அனுமதி தர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

    ஆலை செயல்படுவதற்கான அனுமதியை புதுப்பிக்க வேண்டுமானால் பசுமைத் தீர்ப்பாய உத்தரவில் கூறப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: