ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய அரசியல்வாதி

வாக்கு பதிவு

தேர்தல் வரலாற்றில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்தது.

 • Share this:
  தேர்தல் வரலாற்றில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்தது.

  கர்நாடகா மாநிலத்தில் 1994 மற்றும் 1999 ஆகிய தேர்தல்களில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் 2004 தேர்தலின்போது, முந்தைய தேர்தலில் அவரை எதிர்த்து நின்று தேல்வி அடைந்த வேட்பாளர் துருவ நாராயணாவை எதிர்த்து மீண்டும் சாந்தமாராஹல்லி தொகுதியில் களம் இறங்கினார்.

  தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்தது. அந்த தேர்தல் முடிவு, அவரின் அரசியல் வழ்வை புரட்டிப்போடும் என அப்போது அவர் எதிர்பார்க்கவில்லை. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு உற்சாகமாக அவரும் வாக்களித்தார்.

  அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றிக் கனவோடு காத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அவர் 40,751 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட துருவ நாராயணா 40,752 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார் கிருஷ்ணமூர்த்தி.

  வாக்குப் பதிவு நாளன்று, கிருஷ்ணமூர்த்தியின் கார் ஓட்டுநருக்கு தொடச்சியான வேலைகள் கொடுக்கப்பட்டதால், அந்த ஓட்டுநர் வாக்களிக்க நேரம் இல்லாமல் போனது என்பது தெரியவந்தது. இதை எண்ணி, கிருஷ்ணமூர்த்தி மிகவும் வருத்தப்பட்டாராம்.

  இந்த நிகழ்வு ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை உணரவைக்கும் வகையிலும், எந்த அலட்சியமும் இல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் அமைந்தது.

  Must Read : தேர்தல் விதிமீறல்... கோடிக் கணக்கான வழக்குகள் பதிவு!

  1971 ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எம்.எஸ்.சிவசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சோஷலிச கட்சி வேட்ளாளர் மத்தியாஸைவிட 26 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: