தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே ஆட்சியில் இருந்து வருகின்றன. பாமக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டது. என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. தற்போது, இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுக உள்பட யாருக்கும் பாமக ஆதரவு அளிக்கவில்லை.
இந்த நிலையில் தருமபுரி மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக- அதிமுக கட்சிகள் போதும் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதாக கூறினார். அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது என கூறிய அவர், அதிமுக 4 அணிகளாக பிரிந்துவிட்டது என்றும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை அரை இறுதிப்போட்டி என குறிப்பிட்ட அன்புமணி, அரை இறுதிப் போட்டியில் வென்று, இறுதி போட்டியான 2026 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss, PMK