சென்னையிலிருந்து கொச்சி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்ததால் விமானத்திலிருந்த 86 போ் உயிா்தப்பினா்.
சென்னையிலிருந்து கொச்சி செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று மாலை 6.30 மணிக்கு 81 பயணிகளுடன் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அமா்ந்தனா்.
விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கும்போது விமானத்தில் திடீா் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுப்பிடித்தாா். இதையடுத்து விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டு, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.
இதையடுத்து விமானம் மீண்டும் அது நிற்கவேண்டிய இடத்திற்கே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. விமான பொறியாளா்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய முயன்றனா். ஆனால் உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு கூடத்தில் அமரவைக்கப்பட்டனா். அதன் பிறகு மாற்று விமானத்தில் பயணிகளை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்ததால் விமானத்திலிருந்து 81 பயணிகள், 5 விமான ஊழியா்கள் உட்பட 86 போ் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.