உலோக கழிவுகளை கொண்டு இப்படியும் செய்யலாமா? சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையால் வியந்த மக்கள்!

உலோக கழிவுகளை கொண்டு இப்படியும் செய்யலாமா? சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையால் வியந்த மக்கள்!

பயனற்ற கழிவுகளைகொண்டு அனைவரின் கண்களையும் மனதையும் ஈர்க்கும் வகையில் சிலைகளாக வடிவமைத்த சென்னை மாநகராட்சியின் முயற்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பயனற்ற கழிவுகளைகொண்டு அனைவரின் கண்களையும் மனதையும் ஈர்க்கும் வகையில் சிலைகளாக வடிவமைத்த சென்னை மாநகராட்சியின் முயற்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலோக கழிவுகளால் சென்னை மாநகராட்சி உருவாகிய 16 சிலைகள் காண்போரின் கண்களை மட்டும் அல்ல மனதையும் தன்வசப்படுத்தியுள்ளது.

பழையன கழித்தல் என நம் தேவை முடிந்து தூக்கி எரியும் பொருட்கள் நிலம் தொடங்கி கடல் வரை மாசுக்கழிவுகளாக இயற்கையை சீரழிக்கின்றன. உலக நாடுகளின் பெரும் சவாலாக இருப்பதும் கழிவு மேலாண்மைதான். இயன்ற அளவிற்கு கழிவுகளை மறுசுழற்சி செய்து மாற்று பொருளாக்குவதில் உலகம் கவனம்  செலுத்திவருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி தேவை முடிந்து தூக்கி எரியும் உலோக கழிவுகளை சிற்பங்களாக செதுக்கியிருக்கிறது.

கார், இருசக்கரவானங்கள், தொழிற்சாலை கழிவுகள் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உலோக கழிவுகளை தரம் பிரித்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து தலைசிறந்த சிற்ப களைஞர்கள் வரவழைக்கப்பட்டு கழிவுகளுக்கு உயிரற்ற உடலாய் உருவம் கொடுத்திருக்கிறது சென்னை மாநகராட்சி.

கடல் கன்னி , ஏர்கலப்பை ஏந்தி செல்லும் விவசாயி , மீன் பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்  உலோக கழிவுகளின் உயிரற்ற சிற்பங்கள் காண்போரின் கண்களை தன்வசப்படுத்துகின்றன.குறிப்பாக பழைய இருசக்கர வாகனங்களின் ஜெயின், மற்ற உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கடல் கன்னி சிலை அனைவரின் கண்களையும் தன்வசப்படுத்தியுள்ளது. அதே போல் சுமார்  5 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பருந்து பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.மீன் பிடி தொழிலுக்கு சென்று மீண்டும் கரைதிரும்பிய மீனவர் படகை நிறுத்திவிட்டு நடந்துவரும் காட்சி மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது.

Also read... மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு நற்செய்தி - இந்த ஆண்டு ஊழியர்களுக்கு 7.3% சம்பள உயர்வு கிடைக்கலாம்!

இங்கு உள்ள ஒவ்வொரு சிலைகளும் தனித்துத்துவம் பெற்றுள்ளது.
சென்னையின் அத்தனை இடங்களையும் கண்டு ரசித்து சோர்ந்து போன சென்னை வாசிகள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாகவே மாறியுள்ளது திருவான்மியூர் மேல்நிலைப்பள்ளி வளாகம்.
பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். இந்த சிலைகள் இங்கிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு சென்னை வாசிகள் வாய்ப்பை தவறவிடாமல் கண்டுகழியுங்கள்.பயனற்ற கழிவுகளைகொண்டு அனைவரின் கண்களையும் மனதையும் ஈர்க்கும் வகையில் சிலைகளாக வடிவமைத்த சென்னை மாநகராட்சியின் முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிலைகளை பார்க்க திருவான்மியூர் பகுதி மக்கள் தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருவதால் அந்த பகுதி சுற்றுலா தளம் போல் கலைகட்ட தொடங்கியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: