காலையில் திறந்து மாலையில் மூடப்பட்ட பூங்கா - பொதுமக்கள் குழப்பம்

பொழுதுபோக்கு பூங்கா

மாவட்ட ஆட்சியர் உத்தரவால் மாலையில் அனைத்து பூங்காக்களும் மூடி சீல் வைக்கப்பட்டன

 • Share this:
  திருவண்ணாமலையில் உள்ள சுற்றுலாத்தலங்கள் நீச்சல்குளம் பொழுதுபோக்கு பூங்காக்கள் காலையில் திறந்து மாலையிலேயே மூடப்பட்டதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக விளங்க கூடிய சாத்தனூர் அணை, பதினைந்து நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட சாத்தனூர் அணைக்கு 10 மணிக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வர தொடங்கினர்.

  கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால், தற்போது தமிழகத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து, சாத்தனூர் அணையில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் பண்ணை, முதலைப்பண்ணை மற்றும் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவற்றை சுற்றிப்பார்த்தும், சிறுவர்கள் விளையாடும் சீசா ஊஞ்சல் உள்ளிட்டவற்றில் விளையாடியும் மகிழ்ந்தனர்.

  சாத்தனூர் அணைககு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு, பொதுப்பணித்துறை மூலம் கொரோனோ நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

  இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள், அணைகள் உள்ளிட்டவை 23.08.2021 முதல் 29.08.2021 வரை ஒரு வார காலத்திற்கு மூட உத்தரவிட்டார்.  Must Read : கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  கடந்த 15 நாட்களுக்கு பிறகு நேற்று தமிழக அரசின் உத்தரவுப்படி சாத்தனூர் அணை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவால் மாலையில் அனைத்து பூங்காக்களும் மூடி சீல் வைக்கப்பட்டன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனால், திருவண்ணாமலை மாவட்ட சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குழப்பம அடைந்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: