உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கதான் செய்யும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
ஜனவரி 6,7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற உள்ள சென்னை இலக்கிய திருவிழாவிற்கான இலட்சினையை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “முதன் முதலில் திருச்சியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் போடப்பட்டு அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் போடப்பட்டு தற்போது அனைவருடைய கருத்துக்களை ஏற்று ஒருமித்த முடிவோடு அவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார்” என்றார்.
இதையும் படிக்க : ரேஷன் கடை ஊழியர்கள் நியமணம்.. வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறதா?
“அதேபோல, சிறியவர் பெரியவர் என யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கின்றார். இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அவருடைய செயல்பாடுகள் மூலம் தனது திறமையை அவர் நிரூபித்திருக்கின்றார். எனவே சரியான தருணத்தில் அவர் அமைச்சராக நியமிக்கப்படுகிறார் ” என்றும் அவர் கூறினார்.
“இப்போது அமைச்சரவையில் இடம்கொடுத்தாலும் 30 ஆண்டுகள் கழித்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கதான் செய்யும். எனவே அதை பொருட்படுத்த தேவையில்லை” என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகிகள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மாநில கல்வி வடிவமைப்பு குழுவிடம் கருத்துக்களை அளித்துள்ள கேள்விக்கு பதில் அளித்த அவர், “தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்களுடைய கருத்துக்களை அளித்தாலும் தமிழக அரசு இறுதியான முடிவை எடுக்கும். தமிழ்நாட்டிற்கு எது நன்மை பயக்குமோ அதுவே தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையாக அமையும்” எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbil Mahesh Poyyamozhi, DMK, Minister Anbil Mahesh, Udhayanidhi Stalin