ஊழலால் நிலம் பறிபோய்விட்டது : சகாயத்தை பார்த்து கண்கலங்கிய மூதாட்டி

சகாயம் ஐஏஎஸ்

கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில், ஊழல் காரணமாக தங்களின் பூர்வீக நிலம் பறிபோனதாகக் கூறி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் காலில் விழுந்து கண்கலங்கி நின்ற மூதாட்டி நல்லாட்சி வேண்டும் என்று கூறினார்.

 • Share this:
  கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில், ஊழல் காரணமாக தங்களின் பூர்வீக நிலம் பறிபோனதாகக் கூறி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் காலில் விழுந்து கண்கலங்கி நின்ற மூதாட்டி நல்லாட்சி வேண்டும் என்று கூறினார்.

  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கும் நிலையில், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

  இந்நிலையில், ‘சகாயம் அரசியல் பேரவை கட்சி’ சார்பில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் துரைராஜை ஆதரித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வடவள்ளி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மூதாட்டி ஒருவர் சகாயத்தின் காலில் விழுந்தார்.

  இதைப் பார்த்து பதறிப்போன சகாயம் அவரை தடுத்தார். அப்போது கண்கலங்கியபடி நின்ற அந்த மூதாட்டி, ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி வரவேண்டும். அதற்கு உங்களை போன்ற நல்லவர்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறினார்.

  ஊழல் காரணமாக எங்களின் பூர்வீக நிலம் பறிக்கப்பட்டு விட்டது என்றும், இதனால், நாங்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானதாகவும், தொடர்ந்து ஏழ்மை நிலையில்தான் இருக்கிறோம் எனவும் கூறினார். மேலும், எங்களை போல மற்றவர்கள் பாதிக்கக்கூடாது. அதற்கு உங்களை போன்றவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.

  Must Read :  அ.தி.மு.க எம்.எல்.ஏவிடம் ஜேசிபி ஆப்ரேட்டராக இருப்பவரின் வீட்டிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல் - திருச்சி அரசியல் களத்தில் பரபரப்பு

   

  இதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியிடம் பேசிய சகாயம், தங்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும் என்று கூறி ஆறுதல் படுத்தினார். பின்னர் அந்த மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
  Published by:Suresh V
  First published: